தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தனது முதல் நாளிலேயே 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு அதிரடி காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் அடுத்தக்கட்ட திட்டங்களை அவர் கையில் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல, குடும்பத் தலைவிகளுக்கான ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை மாதம் ரூ. 2,500 ஆக உயர்த்த அவர் திட்டமிட்டுள்ளார். இது மட்டுமன்றி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 3,000 ஆக உயர்த்தி வழங்கவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“புதிய சகாப்தம்” படைப்போம் என உறுதியளித்துள்ள முதல்வர் விஜய்யின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள், தமிழகப் பெண்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.