கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லரும், அவரது துணையும் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததை கொண்டாடுகிறார்கள்..

இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை சாரா டெய்லரின் வீட்டிற்கு புதிய விருந்தினர் ஒருவர் வந்துள்ளார். சாராவின் லெஸ்பியன் பார்ட்னர் டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், தனது பார்ட்னருடன் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு ரசிகர்களுக்கு இந்தத் தகவலை வழங்கினார்.

சாரா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார், “இந்த வாரம் இந்த சிறியவருக்கு எப்படி இருந்தது. லாரியை (Laurie) உலகிற்கு வரவேற்கிறோம். டயானாவும் இந்த புதிய பார்வையாளரும்தான் என் உலகம் என பதிவிட்டார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், சாரா டெய்லருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சாரா டெய்லர் ஒரு தாயானார். சாரா டெய்லர் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் மற்றும் மிகவும் வெற்றிகரமான வீராங்கனைகளில் ஒருவராக பெயரிடப்பட்டார். அவர் செப்டம்பர் 2019 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக, மனநலப் பிரச்சினைகள் காரணமாக மார்ச் 2016 இல் கிரிக்கெட்டில் இருந்து காலவரையற்ற இடைவெளி எடுத்தார். ஆனால் பின்னர் 2017 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார்.

34 வயதான சாரா டெய்லர் 2017 உலகக் கோப்பையில் 49.50 சராசரியில் 396 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 147 ரன்களும், அரையிறுதியில் 54 ரன்களும் எடுத்தது ரசிகர்களின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவர் 45 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து உலக சாம்பியனாவதற்கு உதவியது குறிப்பிடத்தக்கது. லண்டனில் பிறந்த பெண் கிரிக்கெட் வீரர், இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வென்ற மூன்று முறையும் அணிகளில் ஒருவராக இருந்தார்.

அவர் 2009, 2017 இல் ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும், 2009 இல் டி20 உலகக் கோப்பையிலும் ஒரு அங்கமாக இருந்தார். அவர் கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் மொத்தம் 226 போட்டிகளில் இங்கிலாந்துக்காக ஆடியுள்ளார்.

https://www.instagram.com/p/CuVO_lLMwCd/?utm_source=ig_web_copy_link

https://twitter.com/Sarah_Taylor30/status/1676959166932611078