இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார்..

உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் – இந்தியா மேட்ச் மோகம் பற்றி பேச வேண்டியதில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, இரு அணிகளும் ஐசிசி நிகழ்வுகள் மற்றும் ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் சந்திக்கின்றன. இதனால் இரு அணிகளின் சண்டைக்காக (போட்டி) ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆனால் இரு நாட்டு ரசிகர்களுக்கும் இந்த ஆண்டு திருவிழா தான். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் பாகிஸ்தான்-இந்தியா அணிகள் 2  முறை சந்திக்கவுள்ளன. இலங்கையில் முதலில் நடைபெறவுள்ள ஆசியக்கோப்பை -2023 இல் இரு அணிகளின் மோதல் நடைபெறவுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பொதுவாக, இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றால் இரு அணிகளுக்கும் அதிக அழுத்தம் இருக்கும். ஏனெனில் இது ஒரு போட்டி மட்டுமல்ல இரு நாடுகளின் கௌரவம். ஆனால் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி வித்தியாசமாக பதிலளித்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை என ஷஹீன் அப்ரிடி சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை, ஏனெனில் அது ஒரு போட்டி. நமக்கு அது முக்கியமில்லை. உலகக் கோப்பையை எப்படி வெல்வது என்று யோசித்து அதில் கவனம் செலுத்துவோம்” என்று உள்ளூர் சேனலுக்கு அளித்த பேட்டியில் அப்ரிடி கூறினார். இதனிடையே முழங்கால் காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அணியில் இருந்து விலகி இருந்த அப்ரிடி சமீபத்தில் களம் திரும்பினார். அஃப்ரிடி தற்போது இங்கிலாந்தில் நடக்கும் டி20 ப்ளாஸ்டில் நாட்டிங்ஹாம்ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார்.