எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு 52 அடி மற்றும் 77 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி மட்டுமே. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தோனியின் கேப்டன் காலத்தை இந்திய அணியின் பொற்காலம் என்று சொல்லலாம். சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தபோதும், பலரும் தோனியைப் பற்றி பேச ஆரம்பித்தனர்.

41 வயதிலும் சென்னை அணிக்காக 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று தன்னலமற்ற வீரராக வலம் வருகிறார் தோனி. அதேபோல், இப்போது இந்திய அணியில் விளையாடி வரும் விராட் கோலி, ரோகித் சர்மா, அஷ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என அனைத்து மூத்த வீரர்களின் வளர்ச்சியிலும் தோனி முக்கிய பங்காற்றியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 4 ஆண்டுகள் ஆன பிறகும், தோனி மீதான கவனம் இன்னும் குறையவில்லை.

அந்த அளவுக்கு தோனியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கூட சென்னை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோனிக்கு எதிரணி ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்சி அணிந்து வரவேற்பு அளித்தனர். அந்த அளவிற்கு தோனி மீது ரசிகர்கள் அன்பை பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில் மிஸ்டர் கூல் எம்எஸ் தோனி இன்று வியாழக்கிழமை (ஜூலை 7) தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த முறை ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள், இந்நாள் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

இந்த முறை தெலுங்கு மாநிலங்களில் தோனி மோகம் அதிகம் காணப்படுகிறது. தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட கட்அவுட்கள் அமைக்கப்பட்டு அன்பை வெளிப்படுத்தினர். சில ரசிகர்கள் வியாழக்கிழமை காலை கேக் வெட்டுதல், ஏழைகள் மற்றும் அனாதைகளுக்கு பழங்கள் மற்றும் துணிகளை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ் ரோட்டில் 52 அடி தோனியின் பிரமாண்ட கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது. 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தோனி மட்டையைப் பிடித்துக் கொண்டு கிரீஸுக்குள் நுழைவது போன்ற போஸ் மூலம் இந்த கட்அவுட் செய்யப்பட்டது.

ஆந்திராவில், என்டிஆர் மாவட்டத்தின் நந்திகம மண்டலம் அம்பருபேட்டாவில் 77 அடியுடன் தோனி கட்-அவுட் நிறுவப்பட்டது. விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கட்-அவுட் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த கட்அவுட்டுக்கு ரூ. 40 ஆயிரம் செலவிடப்பட்டது. தோனி தான் தங்களுக்கு பிடித்தமானவர் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.. இந்தியா மற்றும் கிரிக்கெட்டுக்காக தோனி நிறைய செய்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துகிறோம் என்றார்கள்.

ஒரு பேட்ஸ்மேன், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் என இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளார் எம்.எஸ். தோனி. மிஸ்டர் கூலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தோனியின் மோகம் குறையவில்லை. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தோனி மற்றும் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் மைதானங்களில் குவிந்தனர். தோனி விளையாடிய அனைத்து போட்டிகளும் பார்வையாளர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  5வது முறையாக ஐபிஎல் சாம்பியனாக்கினார் தோனி. நந்திகமவில் உள்ள தோனியின் ரசிகர்கள் கூறுகையில், 41 வயதிலும் சிறப்பாக விளையாடியவர் தோனி மட்டுமே. உண்மையில், இந்த முறை 100 அடி உயரத்தில் கட்-அவுட் அமைக்க நினைத்தனர். எனினும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 77 அடிக்கு கட்-அவுட் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/VijayFansTrends/status/1677023580901773312

https://twitter.com/CricCrazyJohns/status/1677024762936328193

https://twitter.com/DHONIism/status/1676991289471164416