கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வித்தியாசமான செயல்களை செய்து சாதனை புரிய நினைப்பார்கள். அவ்வகையில் நைஜீரியாவை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு  ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி அவர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது சாதனை செய்ய முயற்சித்துள்ளார்.

ஆனால் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் அவர் சுமார் 45 நிமிடங்கள் தனது பார்வையை இழந்துள்ளார். மேலும் தலைவலி, கண் வீக்கம்  போன்ற பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அதே நாட்டை சேர்ந்த பெண் 100 மணிநேரம் சமையல் செய்து சாதனை செய்ய முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.