உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், மனைவியைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரின் காலில் விழுந்து கணவர் ஒருவர் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுராவைச் சேர்ந்த இவருக்கும், கோண்டா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கணவர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகப் புகார் அளித்த மனைவி, கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இது தொடர்பான விசாரணைக்காக இருவரும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

காவல் நிலையத்தில் நடந்த ஆலோசனையின்போது, தனது தவறை உணர்ந்த கணவர் மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தார். விசாரணை முடிந்து வெளியே வந்தவர், பொதுவெளியில் தனது மாமியாரின் காலில் விழுந்து, இனிமேல் மனைவியை நன்கு கவனித்துக் கொள்வதாக அழுது புலம்பினார்.

“>

 

ஆனால், மாமியார் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். இறுதியில் போலீசார் தலையிட்டு அந்த நபரை அப்புறப்படுத்தினர். மனைவியை அவரது வீட்டார் தூண்டிவிடுவதாகக் கணவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.