“இது புதுசா இருக்குணே!” என்று சொல்லும் அளவிற்கு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மிகவும் வினோதமான செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சென் என்று அழைக்கப்படும் அந்தப் பெண், ஒரு நாள் காலை தூங்கி எழுந்தபோது தனது காதலனின் குரலைக் கேட்க முடியாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அவரால் பெண்களின் குரலையும் மற்ற சத்தங்களையும் தெளிவாகக் கேட்க முடிந்தது.
மேலும் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்ற அவருக்குப் பரிசோதனைகள் செய்ததில், அவர் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்களின் கனத்த குரல்கள், இடி முழக்கம் அல்லது இசைக்கருவிகளின் ‘Bass’ போன்ற குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகள் காதுகளில் விழாது.
இதனால் வழக்கமான செவித்திறன் இழப்பு அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகளையே பாதிக்கும் நிலையில், இதற்கு நேர்மாறாகச் செயல்படுவதால் இது ‘ரிவர்ஸ்-ஸ்லோப்’ என்று அழைக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த வகை நோயைக் குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் முறையற்ற தூக்கமே இந்தப் பெண்ணின் பாதிப்பிற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
