சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14564 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,512 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 245000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.