நேபாள நாட்டில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ளத்தின் போது, எதிர்பாராதவிதமாக வங்கியின் லாக்கர் ஒன்று வெள்ள நீரில் மிதந்து அடித்து வரப்பட்டுள்ளது. இதனைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சில நபர்கள், அந்த வங்கி லாக்கரை நள்ளிரவில் உடைத்து அதற்குள் இருந்த ரூ.58 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை சீற்றத்தால் நாடே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, மிதந்து வந்த வங்கி லாக்கரை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்த இந்தச் சம்பவம் குறித்து நேபாள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், இந்த மெகா கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 29 பேரை காவல்துறையினர் அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.58 லட்சம் ரொக்கப் பணமும் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 29 பேரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
