இயற்கையின் கோபத்திற்கு முன் எந்த எல்லைகளும் இல்லை; எந்த வல்லரசுகளும் பெரியவை அல்ல. ஆகஸ்ட் 26-ஆம் தேதி இமயமலையின் மடியில் அமைந்திருக்கும் நேபாளத்தை உலுக்கிய அந்தச் கொடூரமான திடீர் வெள்ளம் (Flash Flood), எல்லைகளைத் தாண்டி திபெத்தின் எல்லைப் பகுதிகளையும் தரைமட்டமாக்கியது.
மலைகள் பிளந்தன, வீடுகள் முழ்கின, பாலங்களும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டு மனித உயிர்கள் பெருவெள்ளத்தின் கபளீகரத்திற்கு இரையாயின. ஆனால், நேபாளத்திலிருந்து பேரழிவின் ஒவ்வொரு துளி ரத்தக் கண்ணீரும் உலக ஊடகங்களின் கேமராக்களில் பதிவாகி வெளிவந்த போது, திபெத் எல்லைக்குள் நடந்த கொடூரங்கள் மட்டும் ஒரு மாய திரை போட்டு மூடி மறைக்கப்பட்டனவா என்ற அதிர்ச்சி கேள்வி உலக அரங்கில் எதிரொலிக்கிறது!
சீனாவின் இரும்புத்திரை தணிக்கை முறைக்கு பின்னால், திபெத்தின் முக்கிய எல்லைப் பகுதியான ‘கையிரோங்’ (Gyirong) பகுதியில் வீழ்ந்த மனிதர்களின் உண்மையான கதறல்கள் புதைக்கப்பட்டு விட்டனவா?
சிசிடிவி முதல் சமூக வலைதளங்கள் வரை: அவசர அவசரமாக நீக்கப்பட்ட வீடியோக்கள்!
வெள்ளத்தின் வேகம் திபெத் எல்லையைத் தாக்கிய அந்த ஆபத்தான நொடியில், அங்கே வாழ்ந்த உள்ளூர் மக்கள் சிலர் தங்களின் உயிரைப் பணையம் வைத்து அந்த நிலச்சரிவையும், மலைகளிலிருந்து சீறிப்பாய்ந்து வந்த மண், கல் மற்றும் தண்ணீரின் கொடூர ஓட்டத்தையும் படம்பிடித்தனர்.
அந்த வீடியோக்கள் சீனச் சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே, அவசர அவசரமாக இணையத்திலிருந்து நீக்கப்பட்டன!
‘தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) செய்தி அறிக்கையின்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதி இந்த வீடியோக்கள் சீன இணையதளங்களிலிருந்து தணிக்கை செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. சர்வதேச புவிசார் அரசியல் நிபுணர் அடில் பரார் (Adil Brar), மூலோபாய நிபுணர் பிரம்மா செல்லானி (Brahma Chellaney) மற்றும் ‘தி பூட்டனீஸ்’ இதழின் ஆசிரியர் டென்சிங் லாம்சாங் (Tenzing Lamsang) ஆகியோர் சீன அரசின் இந்தத் தகவல் தணிக்கையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
ஒருபுறம், பேரழிவின் நிஜமான கோரத்தை வெளிப்படுத்தும் உள்ளூர் மக்களின் வீடியோக்கள் தணிக்கை செய்து அழிக்கப்படுகின்றன. மறுபுறம், சீன அரசு ஊடகங்களான ‘ஷின்ஹுவா’ (Xinhua) மற்றும் ‘பீப்பிள்ஸ் டெய்லி’ (People’s Daily) ஆகியவை அதிபர் ஷி ஜின்பிங்கின் உத்தரவின் பேரில் சீன ராணுவ ஹெலிகாப்டர்களும் மீட்புக் குழுக்களும் மக்களை எப்படிக் காப்பாற்றுகின்றன என்ற பிம்பத்தை மட்டுமே உலகிற்கு விளம்பரம் செய்து வருகின்றன!
A massive mudslide struck Gyirong Port on the China-Nepal border, with CCTV footage showing a wall of debris slamming through the crossing in seconds, tossing vehicles and buses.
Nepal reports at least 8-16 dead with hundreds of travelers listed as missing, including 291… pic.twitter.com/ZXfDIUaGsC
— Clash Report (@clashreport) August 26, 2026
“>
எண்ணிக்கையில் குழப்பம்… காணாமல் போன 275 இந்தியர்கள்!
வியாழக்கிழமை காலை வரை கையிரோங் பகுதியில் 558 பேர் மாயமாகியிருப்பதாகவும், 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், அங்கு நிகழ்ந்த அழிவின் அளவோடு ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
மறுபுறம், நேபாளத்தில் நிலைமை மிகவும் கொடூரமாக உள்ளது. ஆகஸ்ட் 29 வரை நேபாளத்தில் 675 பேர் உயிரிழந்துள்ளனர்; 2,400-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
இதில் இந்தியாவிற்கு மிகப்பெரிய கவலை என்னவென்றால்:
-
எல்லைப் பகுதியில் 275-க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் இன்னமும் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் மாயமாகியுள்ளனர்.
-
108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
-
கடந்த இரண்டு நாட்களில் 598 இந்தியர்கள் சீனாவிலிருந்து பாதுகாப்பாக நேபாளம் வந்துடைந்துள்ளனர்.
-
மேலும் 900 இந்தியர்கள் சீனப் பகுதியில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
-
China starts censoring flood videos on its social media.
This is not some political protest or ‘anti-govt’ activity.By contrast Nepal has been transparent on its side & there is help & sympathy pouring in & healing will also start.
On the Chinese side propaganda & censorship. https://t.co/CRI6k2VHE2
— Tenzing Lamsang (@TenzingLamsang) August 27, 2026
“>
அணை உடைந்ததா? சீன தூதர் அளிக்கும் விளக்கம்!
“சீனாவின் அணை அல்லது நீர்மின் திட்டங்கள் உடைந்ததால் தான் இந்த வெள்ளம் ஏற்பட்டதா?” என்ற சந்தேக கேள்விகளும் சமூக வலைதளங்களில் எழுந்தன.
ஆனால், இக்குற்றச்சாட்டைச் சீன தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேபாள நாட்டின் ‘NTV World’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சீன தூதர் ஜாங் மாவோமிங் (Zhang Maoming) கூறுகையில்:
“சீனா தரப்பில் அணை எதுவும் உடையும் சம்பவம் நடக்கவில்லை. நேபாளப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, பனிப்பாறைகள் (Avalanche) உடைந்து விழுந்த இயற்கைச் சீற்றமே இந்தத் திடீர் வெள்ளத்திற்குக் காரணம்” என்று விளக்கமளித்துள்ளார்.
வெள்ளத்திற்குக் காரணம் எந்த நாட்டின் கட்டமைப்பும் இல்லை என்பதில் தெளிவு இருக்கலாம். ஆனால், பேரழிவில் தன் குடும்பத்தாரை, வீடுகளை இழந்த சாமானிய மனிதர்களின் கதறலைக் கூட உலகிற்குத் தெரியவிடாமல் தடுப்பது மனிதாபிமானத்திற்குச் செய்யப்படும் மாபெரும் துரோகம்.
ராணுவத்தின் சாதனைகளை மட்டும் திரையில் காட்டி, சாமானிய மக்களின் கண்ணீரைச் சமூக வலைதளங்களிலிருந்து நீக்குவது ஒரு வல்லரசிற்கு அழகல்ல.
