புனேவில் காரின் பானட் மீது இளைஞர் ஒருவரை ஏற்றி வைத்துக்கொண்டு, பெண் ஓட்டுநர் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்கம்வாடி சாலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளார்.

இதனால் பானட் மீது தொற்றிக்கொண்ட அந்த இளைஞர், 2 கிலோமீட்டர் தூரத்திற்குப் பிறகு திடீரென பிரேக் போட்டதால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் ஏர்வாடா பகுதியில் இரண்டு தனித்தனி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், அதிவேகமாக வந்த டெம்போ ஒன்று நடைபாதையில் இருந்த வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

“>

 

இந்த கோர விபத்துகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவாகியுள்ளன.