சென்னை மாவட்டம் கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லும் போது ஒரு வாலிபர் பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவர் இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து காதலை ஏற்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
அதனை ஏற்க மறுத்து இளம்பெண் வாலிபரை பலமுறை கண்டித்ததாக தெரிகிறது. சம்பவம் நடந்த அன்று இளம்பெண் பேருந்தில் சென்ற போது வாலிபர் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த இளம்பெண் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
