கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் வாக்குறுதி எதுவும் நிறைவேற்றாமல் இருக்கும் திமுக, சிலிண்டர் விலை குறைப்பு குறித்து பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இதுதான். போதைப் பொருள் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ஜாபர் ஜாதிக் திமுகவின் அயலக அணியில் இருந்தவர். இந்த விவகாரம் குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.