விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதோடு செங்கல்பட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 406 பேர் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு இந்த வழக்கு மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.