ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரமிளா என்ற பெண்ணுக்கும், ரங்கசாமி என்ற இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விபரீதத்தில் முடிந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த பிரமிளா, ரங்கசாமியுடன் புரோட்டோத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.
ஆனால், ஒரு மாதத்திலேயே இவர்களுக்குள்ளும் சண்டை ஏற்பட்டதால், இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். வெளியே விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த குழந்தைகள், தாய் மற்றும் ரங்கசாமி சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ரங்கசாமியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.
ஆனால், பிரமிளாவின் உடலை வாங்க அவரது கணவரோ அல்லது உறவினர்களோ முன்வரவில்லை. இதனால் போலீசார் நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அவரது உடலை அடக்கம் செய்தனர்.
ஆதரவின்றித் தவித்த பிரமிளாவின் இரண்டு குழந்தைகளுக்குப் போலீசார் புத்தாடைகள் மற்றும் பண உதவி செய்து, அவர்களைக் கடப்பாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்த்தனர். முறையற்ற உறவால் ஒரு குடும்பமே சிதைந்து, குழந்தைகள் அனாதையானது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
