மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் கற்பக நகர் பகுதியில் ஜெய விருமாண்டி(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெய விருமாண்டி தனது நண்பரான சஞ்சய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தனக்கன்குளம் விளக்கு பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி சொல்ல முயன்றனர்.

அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெய விருமாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.