டைரக்டர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் “கலியுகம்”. அதோடு இப்படத்தில் கிஷோர், இனியன் சுப்ரமணி, ஹாரி, அஸ்மல், சந்தோஷ், மணி, ஆர்ய லெக்ஷ்மி, மோசஸ், மாஸ்டர் ரோனித் உட்பட பலர் நடித்து உள்ளனர். ஆர்கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இந்த படத்தின் கதை 2064-ம் ஆண்டில் நடப்பது போல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கலியுகம் படத்தின் டிரைலரை நடிகர் விஜய்சேதுபதி தன் சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.