கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம நகராவில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்படும் என மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலின் போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை 2 வருடங்களில் புனரமைக்கவும் பிரம்மாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கும் ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் பசுவராஜ் பொம்மை அறிவித்தார்.

மேலும் கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.