நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கு, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ‘தாய்மாமன் சீர்’ கொடுத்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பையும், பலத்த விவாதங்களையும் கிளப்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி விளக்கமளித்துள்ள அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழி (சீமானின் மனைவி) தனது சொந்தத் தங்கை போன்றவர் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், தனது தங்கை கயல்விழிக்கு பெண் குழந்தை பிறந்த காரணத்தினாலேயே, ஒரு அண்ணனாக அந்தப் பாசத்தின் அடிப்படையில் தான் நேரில் சென்று தாய்மாமன் சீர்வரிசை கொடுத்ததாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் ரீதியாக மாறுபட்ட துருவங்களாக இருந்தாலும், குடும்ப உறவு மற்றும் பாசத்தின் பின்னணியில் மட்டுமே இந்தச் சந்திப்பு நடந்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த இந்த விளக்கம், சோசியல் மீடியா விவாதங்களுக்கு தற்போதே முற்றுப்புள்ளி வைத்துள்ளது.