மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி அருகே உள்ள லில்வாரா கிராமத்தில் வசிக்கும் கிரிராஜ் பிரஜாபதி என்ற இளைஞர், கடந்த ஜூலை 29ஆம் தேதி ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் தனது டிராக்டர் மூலம் பலரின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சலுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேரில் வந்து புதிய டிராக்டரை பரிசாக வழங்கிய நிகழ்வு அனைவரையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

நிவாரண வழங்கும் நிகழ்ச்சியில், கிரிராஜின் தாயார் கிருஷ்ண பிரஜாபதி, சிந்தியாவிடம் உதவி கோரினார்., அதற்கு “கிரிராஜ் உங்கள் மகன் மட்டுமல்ல, இப்போது என் மகனும்” என மேடையிலேயே அறிவித்த சிந்தியா, தான் கொடுத்த  வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, புதிய டிராக்டரை ஓட்டிக்கொண்டு கிரிராஜின் இல்லத்துக்கு நேரில் வந்தார்.

“>

 

பின்னர், கிராம மக்கள் கைத்தட்டலுடன் வரவேற்ற அந்த நிகழ்ச்சியில், டிராக்டர் சாவியை அவர் நேரில் கையளித்தார். அதன் பின் நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்படும் முழுமையான அரசுத் திட்டங்களைப் பற்றியும், வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் மேற்கொண்ட உடனடி முயற்சிகள், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் ஒருங்கிணைத்த நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

“விழா நேரத்தில் அனைவரும் உங்கள் வீட்டுக்கே வருவார்கள். ஆனால் கஷ்டபடும்  நேரத்தில் உங்களுடன் நிற்பது உங்கள் மக்கள் மட்டுமே,” என உணர்ச்சி மிக்க வார்த்தைகளில் உரையாற்றிய சிந்தியாவின் மனிதநேயம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.