உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கக்வான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில், 14 வயது தலித் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, வீட்டு கழிப்பறை இல்லாததால், ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு சிறுமி வயலுக்கு மலம் கழிக்கச் சென்றபோது, அங்கு காத்திருந்த நான்கு பேர் அவளை வழிமறித்து தாக்கியுள்ளனர். நீண்ட நேரம் கழிந்தும் சிறுமி வீடு திரும்பவில்லை என்பதால் தேடலுக்குப் பிறகு, சுமார் 500 மீட்டர் தொலைவில் மயக்கநிலையுடன், இரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

அவள் சுயநினைவில் வந்ததும், தீபு, ரவீந்திர யாதவ், அருண் எனப்படும் போலா, இக்கு யாதவ் ஆகிய நால்வரும் அவளை வயலுக்கு இழுத்துச் சென்று அரசமரத்தடியில் ஆடைகள் கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பிறகு யாரிடமும் கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
தற்போது, போக்சோ சட்டம், எஸ்சி/எஸ்டி சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசிபி தினேஷ் திரிபாதி மற்றும் ஏடிசிபி கபில்தேவ் சிங் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இந்த இரக்கமற்ற கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
