தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் சின்ன மருது- பாலமுருகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சின்ன மருது தன் மனைவி மற்றும் மகன் மீது கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் பாலமுருகேஸ்வரி புகார் கொடுத்த நிலையில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் பாலமுருகேஸ்வரி தன்னுடைய மகனுடன் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அதிகாரிகள் அவருடைய புகாரை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் சின்ன மருது தன்னுடைய மனைவி மற்றும் மகனை கொடூரமாக கட்டையால் தாக்குதல் நடத்தியது  தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.