ஜோத்பூரில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவம், ஒட்டுமொத்த நகரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஒரு பிரபலமான ஹேண்டிகிராஃப்ட் ஷோரூம் வாசலில் வைக்கப்பட்டிருந்த கனமான ‘பித்தளை யானை’ சிலையை, ஒரு மர்ம நபர் மிக லாவகமாக ஒரு சாக்கு மூட்டைக்குள் திணித்துத் திருடிச் சென்றுள்ளார். அந்தச் சிலையின் எடை அதிகமாக இருந்தபோதிலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் துணிச்சலாகச் சிலையைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

​பட்டப்பகலில், அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு அந்த நபர் பித்தளை யானையை ஆட்டையைப் போட்ட விதம் போலீசாரையே வியக்க வைத்துள்ளது. ஷோரூம் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் அந்தத் ‘துணிச்சலான’ திருடனை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த வினோதமான திருட்டு வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.