தெலங்கானா மாநிலம், இதுகலா பஹாட் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் தாய்ப்பாசத்தின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு அபூர்வ நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகோஜி பீம் ராவ் என்பவருக்குச் சொந்தமான பசுவும் அதன் கன்றும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மேய்ச்சலுக்காகக் காட்டிற்குச் சென்றுள்ளன. அன்று மாலை பசு மட்டும் தனியாகத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த பீம் ராவ், தனது கன்றைக் காணவில்லை என வனத்துறையினரிடம் முறையிட்டார்.

“>

 

மறுநாள் பிப்ரவரி 16 அன்று, அந்த பசுவை மீண்டும் காட்டிற்குள் சுதந்திரமாக விட்டபோது, அது சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வன ஊழியர்களையும் கிராம மக்களையும் பின்தொடரச் செய்து, புலி தனது கன்றைக் கொன்று போட்டிருந்த இடத்திற்கே சரியாக அழைத்துச் சென்றது.

இதைக் கண்ட வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள், அந்த வாயில்லா ஜீவனின் அறிவுக்கூர்மையையும் தாய்ப்பாசத்தையும் கண்டு மெய்சிலிர்த்துப் போயினர்.