பணத்தை கண்டெய்னரில் அனுப்பி விட்டு கொள்ளையர்கள் விமானத்தில் ஹரியானா பறந்துள்ளனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் இயங்கிவந்த  4 ஏடிஎம் இயந்திரங்களில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போலீசார் ஏடிஎம்  கொள்ளையில் ஈடுபட்ட  கும்பலில் உள்ளவர்களை பிடித்து வருகின்றனர். இந்த 4 ஏடிஎம்மிலும் 80 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில், போலீசார் 9 தனிப்படை அமைத்து  தீவிரமாக கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தற்போது வரை 2 முக்கிய கொள்ளைகள் சிக்கி உள்ளனர். அதில் முகமது ஆரிப்பை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆசாத் கான் என்பவரை ஹரியானா மாநில போலீஸ் உதவியுடன் பிடித்துள்ளனர்.

அதில் முகமது ஆரிப் என்ற ஒருவரும், அவருடைய உறவினருமான ஆசாத் கான் என்ற இருவரும் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது.  இவர்களிடம் பெற்ற விசாரணையில் தான் ஒரு சீக்ரெட் தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்த கொள்ளையை எப்படி நிகழ்த்தி உள்ளனர் என வாக்குமூலம் அளித்துள்ளனர்.. ஹரியானாவில் இருந்து நேரடியாக ஆந்திராவின் திருப்பதிக்கு வந்து டாடா சுமோ காரை திருடி கொண்டு, அந்த காரில் திருவண்ணாமலை சென்று ஏடிஎம்-களை  குறி வைத்து உடைத்து அந்த பணத்தை எடுத்து அதன் பிறகு அந்த டாடா சுமோ காரிலேயே திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் சென்று, பெங்களூருவில் ஒரு கண்டெய்னரை எடுத்து காரையும் பணத்தையும் போட்டுவிட்டுள்ளனர்.

பின் அவர்கள் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் டெல்லி பறந்துள்ளனர். டெல்லி போய் சேர்வதற்குள் இந்த கண்டெய்னர் டெல்லி அருகில் வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த கண்டெய்னர் வந்தவுடன்  அதில் ஏறி ஹரியானாவுக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு அந்த காரை இறக்கி காரில் இருந்த பணத்தை எடுத்து உறவினரிடம் ஒப்படைத்து மறைந்துள்ளனர். இந்த காரானது ஹரியானா மாநிலத்தில் தான் இருந்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் காரை பறிமுதல் செய்துள்ளனர்.. அந்த கண்டைனரையும் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளையடித்த பணத்தையும், அந்த காரையும் ட்ரக்கில் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றது தான் ஒரு அதிர்ச்சி தகவலாக உள்ளது. திருவண்ணாமலையில் கொள்ளை அடித்து பெங்களூர் சென்று, அங்கிருந்து ஒரு ட்ரக்கை பிடித்து ட்ரக்கில் காரையும், பணத்தையும் போட்டுவிட்டு, பெங்களூரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்றது தான் அதிர்ச்சி.. தொடர்ந்து அந்த 2 கொள்ளையர்களையும் திருவண்ணாமலை அழைத்து வந்து எப்படி கொள்ளை அடிக்கப்பட்டது என நடித்துக் காட்ட சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையடித்த பணத்தை மீட்கும் முயற்சியில் போலீஸ் ஈடுபட்டு வருகிறது..