சென்னை மாவட்டம் மந்தைவெளி எஸ்.பி.ஐ குடியிருப்பை சேர்ந்தவர் மெல்வின். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மெல்வினுக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் மெல்வின் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மெல்வினுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த காயத்ரி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது கணவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் மெல்வின் மாரடைப்பால் இழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு காயத்திரி கதறி அழுதார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மெல்வின் மாரடைப்பால் உயிரிழந்தாரா?
வணிக வளாகத்திற்கு வந்தபோது எந்த மாதிரியான உணவு சாப்பிட்டார்? வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
