காஞ்சிபுரம் மாவட்டம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கோமளா. இந்த தம்பதியினருக்கு மணிமேகலை(29) என்ற மகள் உள்ளார். தற்போது இரண்டாவது கர்ப்பமான மணிமேகலை பூமுடிப்பு நிகழ்ச்சிக்காக தனது மகள் கிருபாஷினி(8) உடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மணிமேகலை கியாஸ் அடுப்பில் வெந்நீர் வைத்துக் கொண்டே குளியலறையில் தனது மகள் கிருபாஷினியை குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அப்போது நியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மணிமேகலைக்கும் கிருபாஷினிக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிமேகலையும் கிருபாஷினியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
