திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 400 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டாத கட்டண ரசீதுகள், தவறான தகவல்களுடன் ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்ட ஆவணங்கள், கணக்கில் வராத ரூபாய் 332 கோடி ரொக்கப்பணம், ரூபாய் 28 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு மூலம் 7500 கோடி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.