தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்களின் வசதிக்காக பல புதிய அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி பழனி கோவிலில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கும் முறையை இந்து சமய அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது.

பழனி கோவிலில் நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படும் நிலையில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்கள் எண்ணிக்கையை உயர்த்தி காட்டி முறை கேட்டு நடப்பதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதனால் சுதாகரித்து கொண்ட அறநிலையத்துறை கியூ ஆர் கோடு பதித்த டோக்கனை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.