சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோ, எல்லோரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவில், ஒரு இளைஞன் திடீரென கட்டிடத்தின் கூரையிலிருந்து கீழே விழுகிறார். நேராக காரின் மேல் மோதியதால் கண்ணாடி சிதறி சிதறி நொறுங்குகிறது. ஆனால் அப்படியே சாவுக்கு அருகில் சென்று அந்த இடத்தில் அதிர்ஷ்டம் வேலை செய்தது. அந்த இளைஞன் எந்த பெரிய காயமுமின்றி உயிர் பிழைத்து, அமைதியாக காரிலிருந்து இறங்கி நடந்தே சென்றுவிடுகிறார். இதைப் பார்த்தவர்கள் “இது கடவுளின் அற்புதம் தவிர வேறெதுவும் இல்லை” என்கிறார்கள்.

இந்த காட்சி அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், வீடியோவில் நடந்ததெல்லாம் தெளிவாக தெரிகிறது. ஆனால் சம்பவம் நடந்த இடம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனாலே நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்து வருகின்றனர். சிலர், “இது ஒரு திருடன் இருக்கலாம், தவறுதலாக விழுந்து உயிர் தப்பிவிட்டான்” என்று கூற, மற்றவர்கள், “இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை; இது ஒருவித ஸ்டண்ட் தான்” என்று சந்தேகம் எழுப்புகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Studio N Media (@studio_n_media)

“>

இந்நிலையில், studio_n_media என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ ஏற்கனவே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “இவர் நிஜ வாழ்க்கை சூப்பர்மேன் தான்” என ஒருவர் கருத்து தெரிவித்திருக்க, மற்றொருவர் “இது முழுக்க அதிசயம்தான்; இல்லையெனில் உயிர் தப்ப முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் சிலர், “உண்மையில் நடந்த சம்பவம்னா, இதுபோல ஆபத்தான சாகசங்களை முயற்சிப்பவர்கள் அதிகரிக்கக்கூடும்” என்றும் எச்சரித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது