மும்பையின் புகழ்பெற்ற உணவு வகைகளில் ஒன்றான ‘பாவ் பாஜி’, தற்போது ஒரு வெளிநாட்டு உணவுப் பிரியரின் மனதைக் கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அலி கோகா என்ற அந்தப் பிரபலம், ஹோலி பண்டிகையின் போது உடல் முழுவதும் வண்ணங்கள் பூசப்பட்ட நிலையில், மும்பை தெருக்களில் இந்த உணவை ருசித்தார்.
மேலும் வெண்ணெய் வழியத் தயாரான பாவ் பாஜியை ஒரு வாய் சுவைத்த உடனேயே மிரண்டு போன அவர், “நம்பவே முடியவில்லை” என்று வியப்புடன் தெரிவித்தார். இந்த உணவின் சுவைக்கு அவர் “10-க்கு 10” மதிப்பெண் வழங்கிப் பாராட்டிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பாவ் பாஜியைச் சுவைத்தபோது அலியின் முகத்தில் தெரிந்த பிரமிப்பைக் கண்ட ஒரு பயனர், “அவர் கடவுளின் முகத்தையே பார்த்துவிட்டார்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பலரும் இந்த வீடியோவைப் பார்த்துத் தங்களுக்குப் பிடித்த மும்பை தெரு உணவுகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்திய உணவுகளின் அலாதி சுவைக்கு எந்த எல்லைகளும் இல்லை என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
