மும்பையின் விரார் (Virar) பகுதியில் இருந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோ, வெற்றிலை பிரியர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த பொதுமக்களையும் குமட்டல் எடுக்க வைத்துள்ளது.

தெருவோரக் கடைகளில் சுத்தத்தைப் பற்றி நாம் எவ்வளவோ பேசி வந்தாலும், இந்த வியாபாரி செய்த காரியம் அப்பட்டமான அக்கிரமம். ஒரு வியாபாரி, மக்கள் வாயில் போட்டு மெல்லும் வெற்றிலைகளை, அங்கு ஓடும் ஒரு அசுத்தமான சாக்கடை நீரில் நனைத்து நனைத்துக் கழுவியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vasai Virar Updates (@vasai_virar_updates)

சுற்றியும் நச்சுக் கழிவுகள் நிறைந்த பெரிய சாக்கடை கால்வாய் ஓடிக்கொண்டிருக்க, துளியும் பயமின்றி சாலையோரம் ஓடும் அசுத்த நீரில் வெற்றிலையைச் சுத்தம் செய்துள்ளார் அந்த நபர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.

“நம்பிக்கையோடு வாங்கிச் சாப்பிடும் மக்களின் உயிருடன் இப்படி விளையாடுவதா?” என நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் கையாளப்படும் இதுபோன்ற உணவுகளால் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருப்பதால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.