வீட்டுக் கடனுக்கான (Loan) தவணையை வசூலிக்க வேண்டும் என்ற போர்வையில், வங்கி மேலாளர் ஒருவர் ஒரு வீட்டின் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் பெண் மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அந்த மேலாளர், அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் நுழைந்த கணவன், வங்கி மேலாளரின் இந்த அருவருப்பான செயலை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

​தன் கண்முன்னாலேயே மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற அந்த மேலாளரை, ஆத்திரமடைந்த கணவன் சரமாரியாகத் தாக்கியுள்ளார். “வீட்டிற்குள் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?” என்று கேள்வி எழுப்பும் வகையில் அமைந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடனை வசூலிக்க வந்த இடத்தில் காமவெறியில் ஆடிய அந்த மேலாளரின் செயல் கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.