சிறுவயதில் தம்பியைத் தோளில் சுமந்து விளையாடிய அதே பாசத்தோடு, இன்று அவன் போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருப்பதைக் கண்டு அந்த அக்கா அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தன் தம்பி காக்கிச் சீருடையில் கம்பீரமாக வந்து நிற்பதைப் பார்த்த அந்த அக்கா, ஆனந்தக் கண்ணீருடன் “தம்பி என் தோள் மேல உட்காருடா” என்று கூறி, ஒரு குழந்தையைப் போல அவனைத் தன் தோளில் தூக்கிச் சுமந்து கொண்டாடினார்.

​இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி, பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. “எத்தனை உயர்வுகள் வந்தாலும் அக்காவிற்குத் தம்பி எப்போதும் குழந்தைதான்” என்பதை நிரூபிக்கும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு லைக்குகளைக் குவித்து வருகிறது. சீருடை அணிந்த தம்பியும், பெருமிதத்தில் திளைக்கும் அக்காவும் இன்றைய இணையதளத்தின் ஹீரோக்கள்!