பிரபல பாடகர் கவிராஜ் ஜிக்னேஷ் பங்கேற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில், அவர் மேடையில் விறுவிறுப்பாகப் பாடிக் கொண்டிருந்தார். அவரது குரலால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், உற்சாகத்தின் உச்சத்திற்குச் சென்று அவர் மீது பணத்தை வாரி இறைக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் சில்லறைக் காசுகளாக இல்லாமல், நோட்டுக்களாக மூட்டை மூட்டையாக அவர் மீது கொட்டத் தொடங்கினர்.

​அந்தப் பண மழையில் பாடகர் கவிராஜ் ஜிக்னேஷ் அப்படியே மூழ்கிப் போனார். அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே சுற்றிலும் பணக் குவியல்கள் மலை போலக் குவிந்தன. இந்த அசுரத்தனமான கொண்டாட்டத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் மிரண்டு போயினர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இசையின் மீதுள்ள காதலா அல்லது பணத் திமிரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.