கேரள மாநிலத்தில், மாலை 4:30 மணியளவில் நேர்ந்த கொடூர சாலை விபத்தில் 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்பால் என்று அடையாளம் காணப்பட்ட அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளில் தவறான பாதையில் வேகமாகச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மினிவேன் மீது பைக் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இக்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சிக்கிய மற்ற மூன்று பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
💔 A tragic accident in Tanur, Kerala, left one person dead and three others injured after a collision between a bike and a mini-van.#Kerala #Tanur #RoadAccident #Accident #ViralVideo pic.twitter.com/jGnWVuq8zG
— Thought to Thought 🇮🇳💭 (@T2TVerse) June 9, 2026
“>
இந்த பயங்கர விபத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பைக் மற்றும் வேன் மோதிக்கொண்ட வேகத்தில் இக்பால் தூக்கி வீசப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், சாட்சிகளிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
