ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில், குரங்கு ஒன்று தெருவோரக் குட்டி நாய் ஒன்றைத் தூக்கிக்கொண்டு சுமார் 20 அடி உயர மரத்தின் மீது ஏறிய அதிரடி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குரங்கு நாய் குட்டியை உயரத்திலிருந்து கீழே போட்டுவிடுமோ என்று அச்சமடைந்த உள்ளூர் பொதுமக்கள் மரத்தின் அடியில் திரண்டனர்.
ஆனால், அனைவரது கணிப்பையும் பொய்யாக்கும் வகையில், அந்த குரங்கு நாய் குட்டியைத் தனது சொந்தக் குழந்தை போலக் கட்டிப்பிடித்து, சுமார் 15 நிமிடங்கள் பாசத்துடன் அரவணைத்துக் கொஞ்சியதுடன், எவ்வித காயமுமின்றி பத்திரமாகத் தரையில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளது.
<a href=”http://
बंदरों का आतंक इससे ज़्यादा क्या हो हो सकता है कि वो एक कुत्ते के पिल्ले को लेकर पेड़ पर जा चढ़े। यह घटना हिमाचल के रिवालसर की है। सहमा सा पिल्ला बंदर की गोद में दुबका है कि कहीं पेड़ से नीचे फेंक दे। pic.twitter.com/CptEiUwp9O
— thehillnews.in (@thehill_news) June 8, 2026
“>
இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விலங்கியல் ஆர்வலர் இது விலங்குகளின் இயல்பான தாய்மை உணர்வுதான் என்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
