வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலா சென்ற இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடத்தில் குளியல் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ திரைப்படப் பாடலுக்கு அவர் எவ்வித கூச்சமும் இன்றி நடனமாடுவதையும், அதைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் மிரட்சியுடனும் பார்ப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது.
இந்தச் செயல் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மதித்து நடக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இது போன்ற பொறுப்பற்ற மற்றும் அருவருப்பான செயல்கள், வெளிநாடுகளில் ஒட்டுமொத்த இந்தியர்கள் மீதான நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் அமையும் என நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ரீல்ஸ் வீடியோக்களுக்காகப் பொது இடங்களில் எல்லை மீறிச் செயல்படும் போக்கு தொடர்கதையாகி வருவதையும், இது கலாச்சாரச் சீரழிவு எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
