ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மளிகை வியாபாரி ஒருவரின் கால்சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடிகுண்டு போல வெடித்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோபால் சோனி (39) என்ற அந்த வியாபாரி, சம்பவத்தன்று தனது கடையில் அமர்ந்திருந்தபோது, அவரது பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் திடீரெனப் பலத்த சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்தது.
லேப்டாப்பில் இருந்து மின்சாரம் தாக்கியதாக நினைத்துக் கீழே பார்த்தபோது, அவரது கால்சட்டை கொழுந்துவிட்டு எரிந்ததால், பதற்றமடைந்த அவர் தீப்பிடித்த போனைப் பாக்கெட்டில் இருந்து வெளியே எடுக்க முயன்றார்; இதனால் அவரது தொடையின் மேற்பகுதி மற்றும் கை, கால் விரல்கள் கடுமையாகத் தீக்காயமடைந்து தோல் உரிந்தது.
<a href=”http://
जोधपुर : किराना व्यापारी की जेब में रखा फोन अचानक हुआ ब्लास्ट
◆ शख्स का जांघ का हिस्सा और हाथ गंभीर रूप से झुलस गए
◆ घटना का वीडियो CCTV में हुआ कैद
Jodhpur | Rajasthan | Viral | Viral Video pic.twitter.com/FDeGETLAPT
— News24 (@news24tvchannel) June 9, 2026
“>
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து வியாபாரிகள் அவரை மீட்டு, முதலில் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காயம் மிகவும் ஆழமாக இருந்ததால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுனர் மேற்பார்வையில் சிறப்புத் தீக்காயப் பிரிவுக்கு மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பொதுவாக இரவு முழுவதும் சார்ஜ் போட்டாலோ அல்லது போன் ஹீட் ஆனாலோ தான் வெடிக்கும் என்று நம்பப்படும் நிலையில், இந்த போன் வெறும் 87% சார்ஜில் இருந்தபோதும், எந்தவித வெப்பமோ அல்லது பழுதிற்கான அறிகுறியோ இல்லாமல் திடீரென வெடித்தது ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் கவலையையும், அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
