கனரா வங்கியானது ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் வருங்காலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு கனரா ஜீவன் தாரா என்ற சிறந்த சேமிப்பு வங்கி கணக்கு அறிமுகம் செய்துள்ளது. தன்னார்வ அடிப்படையில் அல்லது சாதாரண ஓய்வூதிய திட்டத்தின் ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களும் இந்த திட்டத்தில் தகுதியுடையவர்கள் இது குறித்து வெளியான அறிக்கையில், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு சேமிப்பு வங்கி கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது வைப்பு தொகைக்கு எதிரான கடன், மருத்துவச் செலவு சலுகைகள் மற்றும் பல பலன்களை இதிலே பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த சேவைகளை பெறுவதற்கு கனரா வங்கி கிளைக்கு வருகை தர வேண்டும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது . ஜீவன் தாரா சேமிப்பு கணக்கின் வட்டி விகிதமானது வழக்கமான கணக்கை போலவே இருக்கும். இது கணக்கில் உள்ள இருப்பை பொறுத்து 2.90% முதல் 4% வரை இருக்கும்.