நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மக்கள் தங்களின் ஓய்வு காலத்தில் நிதி உதவி பெறுவதற்காக மத்திய அரசு பல ஓய்வூதிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதில் அடல் ஓய்வூதிய திட்டம், தேசிய ஓய்வூதிய அமைப்பு, தேசிய சமூக உதவி திட்டம் மற்றும் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் ஆகியவை சிறப்பு திட்டங்கள் ஆகும்.

அடல் ஓய்வூதிய திட்டம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் பதினெட்டு முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் தங்களின் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். மேலும் 60 ஆண்டுகள் முடிந்த பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு:

இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 20 வயது வரை உள்ள இந்திய குடிமகன்கள் சேரலாம் எனவும் 60 வயது நிறைவடைந்த பிறகு அவர்களுக்கான மொத்த தொகை அல்லது மாத ஓய்வூதியம் வழங்கப்படும் இணக்கப்பட்டுள்ளது.

தேசிய சமூக உதவி திட்டம்:

நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மாதம் 200 முதல் 500 ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தில் சேர்ந்த நபர் உயிரிழந்தால் குடும்பத்திற்கு 20,000 ஒருமுறை வழங்கப்படும்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம்:

இந்த திட்டம் 70 முதல் 79 வயது வரையிலான பிபிஎல் பிரிவை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும். இதில் மாதந்தோறும் 200 ரூபாய் ஒய்வூதியம் வழங்கப்படும்.