சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான IPL- 2024 இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டித் தூக்கியது. இந்த வெற்றியால் கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தார்.

அவருக்கு நன்றி தெரிவித்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “அணியின் இதயத் துடிப்பான ஷாருக்கானை இங்கு குறிப்பிட விரும்புகிறேன், உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி” என்றார்.