இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம்.

உத்தேசமாக 04052 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். அதில் முதல் இரண்டு எண்களான 04 அது 2004 தயாரிக்கப்பட்டதை குறிக்கிறது. மீதமுள்ள மூன்று எண்களான 052 ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி என்பதை குறிக்கிறது. அதாவது 001-025 வரை ஏசி முதல் வகுப்பு, 051-100 வரை ஏசி இரண்டாம் வகுப்பு வெட்டியாகும். இதேபோல் 800 வரை உள்ளது.