ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.பி.எஸ் அணியில் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரம் மற்றும் பரமக்குடி போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் திரளாக வந்து இணைந்திருப்பது, அந்த மாவட்டத்தில் ஓ.பி.எஸ் அணிக்குப் பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பாக மாவட்டத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் மீண்டும் தாய்க் கழகத்திற்கே திரும்பியிருப்பது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
