தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், தமிழகத்தில் மும்முனைப் போட்டி நிலவுவதாகத் தெரியவில்லை என்றும், திமுக – அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அவர் சிலரது வாக்குகளைப் பிரிக்க வாய்ப்பு இருந்தாலும், ரசிகர்களின் ஆதரவை முழுமையான வாக்குகளாக மாற்றுவதற்கு வலுவான கட்சி கட்டமைப்பு என்பது மிகவும் அவசியம் என்றும், அது இல்லையெனில் வெற்றி பெறுவது கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.