தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் அளித்துள்ள பேட்டியில், நடிகர் விஜயை பாஜக கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அரசியலில் நடிகர்கள் வருவதும் போவதும் இயல்பான ஒன்று என்றும், அவர்களைத் தேடிச் செல்ல வேண்டிய தேவை கட்சிக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வெறும் ரசிகர்கள் மட்டும் ஒருவரைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்துவிட முடியாது என்றும், அதற்கு வலுவான மக்கள் செல்வாக்கும் நிர்வாகத் திறனும் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.