பிரயாக்ராஜ் நைனி ரயில் நிலையத்தில் மனிதாபிமானத்தின் உன்னதமான ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. காமாயனி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மெதுவாக நகரத் தொடங்கியபோது, பயணி ஒருவர் ஓடும் ரயிலில் அவசரமாக ஏற முயன்று நிலைதடுமாறி நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையிலான இடைவெளியில் விழுந்தார்.
மேலும் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கி அந்த நபரின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்ட அந்த இக்கட்டான நொடியில், அங்கு பணியிலிருந்த பாயிண்ட்ஸ்மேன் மின்னல் வேகத்தில் செயல்பட்டார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்ந்து சென்ற அந்த ஊழியர், பயணியை அசுர வேகத்தில் வெளியே இழுத்து காப்பாற்றினார். சில நொடி தாமதமாய் இருந்தாலும் ஒரு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
UP में प्रयागराज के नैनी रेलवे स्टेशन पर इंसानियत की मिसाल देखने को मिली।
कामायनी एक्सप्रेस गतंव्य को रवाना हो रही थी, तभी एक यात्री ने दौड़कर चलती ट्रेन में चढ़ने की कोशिश की और फिसलकर गिर पड़ा। वह ट्रेन की चपेट में आने ही वाला था कि वहीं ड्यूटी पर तैनात पॉइंट्स मैन ने बिना जान… pic.twitter.com/jxtHg5TdYE— TRUE STORY (@TrueStoryUP) January 31, 2026
“>
இந்த வீரமிக்க செயலையும், சமயோசித புத்தியையும் அங்கிருந்த பயணிகள் வியந்து பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த மீட்பு வீடியோ, கடமை உணர்ச்சிக்கும் மனிதநேயத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வதோடு, ஓடும் ரயிலில் ஏறுவது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
