ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் ஊடக ஆலோசகர் மகேந்திர பரத்வாஜ், ரயிலில் பயணம் செய்தபோது கழிவறைக்குள் சிக்கி சுமார் ஒரு மணி நேரம் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 30-ஆம் தேதி மாலை, கோட்டாவிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்ற கோட்டா-ஸ்ரீகங்காநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் பயணம் செய்தபோது, சவாய் மாதோப்பூர் அருகே கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது கழிவறையின் உட்புற தாழ்ப்பாள் திடீரென ஜாம் ஆனதால் கதவைத் திறக்க முடியாமல் அவர் உள்ளேயே சிக்கிக்கொண்டார். குறுகிய இடத்தில் துர்நாற்றம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். ஆனால், யாருக்கும் சத்தம் கேட்காத நிலையில், தனது மகன் மற்றும் உறவினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார்.
राजस्थान | पूर्व CM वसुंधरा राजे के मीडिया सलाहकार महेंद्र भारद्वाज 1 घंटे तक ट्रेन के टॉयलेट में फंसे रहे। वो चिल्लाते रहे…गेट तोड़ो वरना मौत हो जाएगी। मामला कोटा–श्रीगंगानगर एक्सप्रेस ट्रेन का है। pic.twitter.com/AnvPq9drNw
— Sachin Gupta (@SachinGuptaUP) February 1, 2026
“>
மேலும் தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 10 நிமிடங்கள் போராடியும் கதவைத் திறக்க முடியவில்லை. இறுதியாக, கதவை உடைக்க முடிவு செய்தபோது, அது தன் மீது விழுந்து விடாமல் இருக்க மகேந்திர பரத்வாஜ் கதவைத் தாங்கிப் பிடித்தார். சுத்தியலால் கதவு உடைக்கப்பட்டதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டாலும், ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இந்த கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, ரயில்களில் கழிவறைக்குச் செல்லும்போது பயணிகள் கண்டிப்பாக செல்போனை உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், ரயில்வே நிர்வாகம் பழைய பெட்டிகளின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
