அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு வளர்ப்பு நாய்களைக் காரின் பின்னால் கட்டிச் சாலையில் கொடூரமாக இழுத்துச் சென்ற முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி, டான் புஜோர் (68) என்பவர் தனது ரெட் வோக்ஸ்வேகன் காரின் பின்னால் இரண்டு நாய்களைக் கட்டி அதிவேகமாக இழுத்துச் சென்றுள்ளார். ஓடும் காரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த வாயில்லா ஜீவன்கள் தார்ச் சாலையில் தேய்ந்து இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காரை மறித்து நாய்களை மீட்டதோடு இது குறித்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
Heartbreaking animal cruelty unfolded in Queens, NYC, when a 68 year old driver was caught dragging two dogs tied to the back of his car through traffic near the Pulaski Bridge in Long Island City.
Quick acting bystanders stepped in, stopped the vehicle, and freed the terrified… pic.twitter.com/Zeh3IigBs0
— The Kind Joe (@TheKindJoe) January 6, 2026
“>
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த குயின்ஸ் மாவட்ட காவல்துறையினர், விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் புஜோரைக் கைது செய்தனர். படுகாயமடைந்த நாய்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், முறையான ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
