இன்றைய டிஜிட்டல் தலைமுறையில், புகழ் பெறுவதற்காக ரீல்ஸ் எடுப்பது சாதாரணமாகிவிட்டது. ஆனால் சிலர், அதற்காக எதை செய்வதிலும் தயங்குவதில்லை. அப்படித்தான் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் மாடியில்  ரீல்ஸ் செய்கிறார்  குரங்கை வெறுப்பேற்றும் விதமாக அதன் முன்பு  நடனமாடுகிறார். அருகே இருந்த ஒரு லங்கூர், தனது அமைதியை இழந்து, அந்த பெண்ணின் தலைமுடியை கடுமையாக இழுக்க தொடங்குகிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “@syadvada169665” என்ற பயனர் பதிவிட்டுள்ளார். அதில், பெண் ஒருவர் ரீல்ஸ் எடுக்கும் போது, அங்கிருந்த குரங்கு நெருங்கி வந்து தலை முடியை இழுக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வலியால் அந்த பெண் கதற, குரங்கின் பிடியில் இருந்து தப்பிக்க முயல்கிறார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

“>

 

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “ஏன் குரங்கிடம் போனாய்?”, “இந்த ரீல்பாஸ் கலாச்சாரத்தால் இப்போ விலங்குகளும் தொந்தரவு அடையுறாங்க” என கலாய்த்து வருகிறார்கள். ஒரு பயனர் “இந்த மாதிரி ரீல்பாஸ் செய்யுறவங்களை நேரா சர்க்கஸ்ல சேர்க்கணும்!” என பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவின் மூலம், சமூக ஊடக புகழுக்காக எல்லையை மீறுவது எப்படி ஆபத்தாக மாற முடியும் என்பதற்கே எடுத்துக்காட்டு இது.